INTERNATIONAL TAMIL RADIO FRANCE
Tamil Entertainment Radio
89.3 fm Canada, Montreal, Quebec , Tor0nto
LIVE  RADIO CLIC HERE

1981 இல் ஐரோப்பாவில் முதன்முதலாக ஒலித்த தமிழ் வானொலியின்
அறிவிப்பாளர் என்ற பெருமையுடன் 
               சரவணையூர் விசு செல்வராசாவினால் 
ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச தமிழ் வானொலி இன்று தனது இருபத்திஓராவது 
வருடத்தை பூர்த்தி செய்து இன்று இருபத்தியிரண்டாவது வருடத்தில் 
கால் பதிக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் நேயர்களோடு பகிர்ந்து கொள்கிறோம்  

எமது நிகழ்ச்சிகள்
0 70 90 86 44
ITR.FR
438 448 4373
00 33 767 528 755
00 33 767 528 755
00 33 767 528 755
 தகவல்கள்
JARINA EASY VOYAGE 
காலைக்கதம்பம்
இன்றையநாள் எப்படி 
நாளும் கோளும் ராசிபலன் 
முகநூல் தகவல்
உறவுகள் பேசும் 
உங்கள் உள்ளம் கவர்ந்த ராகங்கள் 
செய்திகள் 
தினமும் 
தமிழகத்தில் இருந்து நெற்றிக்கண் மனோகரன் வழங்கும் 
இந்தியா இன்று 
சனிக்கிழமைகளில் 
ஜெர்மனியில் இருந்து  ஞானலிங்கம் வழங்கும் 
மறக்கமுடியுமா 
தினமும் இத்தாலியில் இருந்து  குமரன்  வழங்கும் நெஞ்சம் மறப்பதில்லை 
இத்துடன் தினமும் பல பல்சுவை நிகழ்ச்சிகளுடன் 
சர்வதேச தமிழ் வானொலி உங்களை மகிழ்விக்க வருகிறது 
உங்களை அனைத்து வாழ்த்து நிகழ்சிகளையும் இலவசமாக எமது வானொலியூடாக  பகிர்ந்து மகிழுங்கள் 

சர்வதேச  தமிழ்  வானோலி  உங்களை  அன்புடன் வரவேற்கிறது 
 
 செய்திகள்
TALK SHOW NUMBER
Tel 05 62 94 35 38. Fax. : 05 62 94 35 38.  E-mail : sundar199@hotmail.com.
லூர்து நகரில் முதல் தமிழர் 
தங்கு விடுதி 
இலங்கை இந்திய உணவுகளுடன் அன்புடன் 
உங்களை வரவேற்கிறது 
HOTEL VIEUX LOURDES
HOTEL VIEUX LOURDES
மலேசியாவை விட்டு மாஜி பிரதமர் நஜீப் வெளியேற தடை- ஊழல் புகார் குறித்து விசாரணை!

 சிறுநீரக கற்கள் இருந்தால் பால் அருந்தக்கூடாதா.?
சிறுநீரக கற்கள் பிரச்சனை இருப்பவர்கள் பால் அருந்தலாம் என மருத்துவர்கள் கூறினார். ஆனால் தண்ணீர் குடிக்கும் அளவை கணிசமாக அதிகரிக்க வேண்டும் என கூறுகிறார்கள். உப்பு உள்ள உணவுகளை அறவே ஒதுக்க வேண்டுமே தவிர பால் குடிக்கக்கூடாது என்பது இல்லை எனவும் கூறப்படுகிறது. மேலும் சிறுநீர கற்கள் உள்ளவர்கள் வெந்நீரை குடிக்க வேண்டும் எனவும் தெரிகிறது.
மாதவிடாய் நின்ற பெண்கள் கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள்!
மாதவிடாய் நின்ற பெண்கள் தங்களது ஆரோக்கியத்திற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசயம் அதிகம் இருக்கிறது. குறிப்பாக தினமும் 500 மி.லி. பால் கண்டிப்பாக குடிக்க வேண்டும். தினமும் பால் குடிப்பதன் மூலம் உடலின் கால்சியம் சத்து உயரும். மேலும் எலும்பு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து மாதவிடாய் நின்ற பெண்கள் தப்பிக்க முடியும்.
 மாதுளை ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
ஒரு ஆரோக்கியமான டயட்டில் பழச்சாறுகளும் முக்கிய பங்கை வகிக்கிறது. காய்கறி ஜூஸ்கள் மிகவும் பிரபலமானதாக மற்றும் ஆரோக்கியமானதாக இருந்தாலும், அனைவராலும் காய்கறி ஜூஸ்களைக் குடிக்க முடியாது. ஆனால் பழங்களால் தயாரிக்கப்பட்ட ஜூஸ் என்றால் கட்டாயம் அனைவருமே விரும்பி குடிப்போம். அந்த வகையில் பழச்சாறுகள் ருசியாக இருக்கும். அப்படி மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான ஒரு பழச்சாறு தான் மாதுளை ஜூஸ். மாதுளை அனைத்து காலங்களிலும் கிடைக்கும் ஒரு அற்புதமான பழம். இந்த மாதுளை ஜூஸ் பல்வேறு நோய்களை குணப்படுத்தவும், தடுக்கவும் செய்யும். சமீபத்தில் மாதுளை ஜூஸ் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்த ஜூஸில் உள்ள ஏராளமான ஊட்டச்சத்துக்கள், க்ரீன் டீயை விட ஆரோக்கியமானதாக்குவதாக தெரிய வந்துள்ளது.


 நாம் சாப்பிடும் உணவில் தினம் ஒரு முட்டை நல்லதா....
மனிதர்கள் சாப்பிடும் விருப்பமான மற்றும் சத்தான உணவுகளில் முட்டையும் ஒன்று. இதில் உடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் அடங்கியுள்ளன. ஒரு முட்டையில் புரதச்சத்து சுமார் ஆறு கிராம் இருக்கிறது. மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. அது, நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும்.முட்டையில் உள்ள லூடின் மற்றும் சியாங்தின் கண் நோய்கள் வராமல், கண் புரை ஏற்படாமல் தடுக்கும். மேலும் உடல் எடையைக் குறைப்பதற்கும் உதவி  செய்யும். நம் அன்றாட உணவில் தாராளமாகச் சேர்த்துக்கொள்ளலாம்.நம் உடலுக்குக் கெட்ட கொழுப்புகளால்தான் பிரச்சனை ஏற்படும். ஆனால், முட்டையிலோ நல்ல கொழுப்புகள்தான் நிறைந்துள்ளன. அதனால் எவ்விதமான கோளாறுகளும் முட்டையால் ஏற்படாது.

சிறுநீரக கற்களை கரைத்திடும் முள்ளங்கி சாறு...!
முள்ளங்கியை பலர் சீண்டுவதே இல்லை. அது ஏதோ ஒதுக்கப்பட்ட காய்கறி போல அதை பலர் விரும்புவதும் இல்லை. குறிப்பாக குழந்தைகள் முள்ளங்கி என்றாலே முகத்தை தூக்குகிறார்கள். ஆனால் அதில் உள்ள தாதுக்கள் மற்றும்  வைட்டமின்கள் நிறைந்துள்ளன.
சிறுநீரக கற்களை முற்றிலும் கரைப்பதற்கு சக்தி படைத்தது முள்ளங்கி. சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் முள்ளங்கியை வேக  வைத்து, அந்த நீரை குடித்து வர சிறுநீரக கற்கள் முற்றிலும் கரைந்து போகும். தொடர்ந்து முள்ளங்கியை பயன்படுத்தி வர  மீண்டும் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கிறது.
பாலியல் உணர்வை அதிகரிக்கச் செய்யும் வெந்தயம்
வெந்தயத்திற்கு, பாலியல் உணர்வுகளை அதிகரிக்கும் சக்தி இருப்பதாக வெளிநாட்டு ஆய்வு முடிவுகளும் உறுதிப்படுத்துகிறது. இந்த ஆய்வுக்காக 25 வயது முதல் 55 வயது வரையிலான 60 ஆரோக்கியமான ஆண்களை ஆய்வு செய்த போது, அவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 முறை என மொத்தம் 6 வாரங்களுக்கு வெந்தயம் மற்றும் வெந்தயச் சாறு கொடுத்து, கண்காணிக்கப்பட்ட போது, ஆறு வார காலத்திற்குப் பின்பு, அவர்களது பாலியல் உணர்வுகள் பல மடங்கு அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. வெந்தயம் சாப்பிடாத சிலரை அதே போல் ஆய்வுக்குட்படுத்திய போது அவர்களுக்கு பாலியல் உணர்வுகள் குறைவாகவே இருந்துள்ளது.
 ஏராளமான மருத்துவ குணங்களை கொண்ட இலவங்கம்...!
இலவங்கத்தை இடித்து பொடி செய்து அரை கிராம் அளவு காலை, மாலை இருவேளை தேனில் குழைத்து சாப்பிட அக உறுப்புகள் அனைத்தும் பலம் ஏற்படும்.  இலவங்கப்பட்டை ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது. பாட்டி வைத்தியமாக பட்டையை இருமலுக்கு தற்காலிக மருந்தாகத் தருகின்றனர்.
மலேசியா: முன்னாள் பிரதமர் நஜிப் நாட்டை விட்டு வெளியேற தடை

நஜிப் ரசாக் மற்றும் அவரது மனைவி
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், நாட்டில் இருந்து வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது என குடியேற்றத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
நஜிப் ரசாக்கும், அவரது மனைவியும் விடுமுறையைக் கழிக்க வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், அதிகாரிகள் இவ்வாறு கூறியுள்ளனர்.
மலேசியாவை 60 ஆண்டுகள் ஆட்சி செய்த, நஜிப் ரசாக்கின் பேரீஸான் நேஷ்னல் கூட்டணி அதிர்ச்சித் தோல்வியடைந்தது.
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டது.
பொது தேர்தலில் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை பெற்றஅந்நாட்டின் முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹமத், கடந்த வியாழக்கிழமையன்று, 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பிரதமராக பதவியேற்றுள்ளார்.
மகாதீர் மொஹமத்
நஜிப் ரசாக் மீதான ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளில் ஒரு முழுமையான விசாரணை நடக்கும் என பிரதமர் மகாதீர் மொஹமத் கூறியிருந்தார்.
நஜிப் ரசாக் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது என குடியேற்றத் துறை அதிகாரிகள் தன்னிடம் தெரிவித்துள்ளதாக மகாதீர் ட்வீட் செய்துள்ளார்.
நஜிப்பும், அவரது மனைவியும் விடுமுறையைக் கழிக்க சனிக்கிழமையன்று இந்தோனீசிய தலைநகர் ஜகார்த்தா செல்ல திட்டமிட்டிருந்தாக நம்பப்படுகிறது.
அரசு முதலீட்டு நிதியில் ஊழல் மற்றும் முறைகேடு செய்ததாக நஜிப் குற்றம்சாட்டப்பட்டார்.
இந்த ஊழல் குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக நாட்டில் புகைந்துகொண்டிருந்தது.
New Page 1

Desangall Thoorum Visu Selvaraja சரவணையூர் விசு ...

https://www.youtube.com/watch?v=CQ0FqEF4uM0
Dec 25, 2015 - Uploaded by Visuwasam Selvarajah

பாடல் : தேசங்கள் தோறும் பாடல் வரிகள் சரவணையூர் விசு செல்வராசா இசை .இளவரசு மலேசியா பாடியவர்